சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 1,321 பேருக்கு கொரோனா நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ஆதனூர் சாலையில் உள்ள ஏழாவது வார்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அதில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் செந்தமிழ் செல்வி, மானாமதுரை நகர செயலாளர் பொன்னுச்சாமி, தி.மு.க. மாவட்ட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து தலா ரூ.2 ஆயிரம் 1,321 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கியுள்ளார்.