கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகை நக்மாவுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அமீர்கான், மாதவன் ஆலியா பட், கத்ரீனா கைப் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த வரிசையில் பிரபல நடிகை நக்மாவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். நக்மா கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.