Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : கொரோனா : குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 …!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருப்பதற்காக இன்று முதல் 144 தடை உத்தரவு அமலாக இருக்கின்றது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற அனைத்தும் முடக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் பல தரப்பிலிருந்தும் வாழ்வாதாரங்கள் சார்ந்த கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்  தமிழக சட்டசபையில் அறிவித்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை அனைத்து வகையான விஷயங்களும் முடக்கப்படும் நிலையில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து இயங்கும் என்று, கூலித் தொழிலாளிகள், தினசரி வேலைக்கு செல்பவர்களின் நலன் கருதி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே1 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்ற மிக முக்கியமான அறிவிப்புகளை தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். கூட்டம் கூடுவதை தடுக்க அனைவருக்கு டோக்கன் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |