கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு வருவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. மேலும் ஹீலர் பாஸ்கர் மீது சட்டப்படி எடுக்க வேண்டும் என்ற புகாரையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர.