Categories
பல்சுவை

“கொரோனா” நம்மை பாதுகாக்க…. 5 அற்புத வழிமுறைகள்….!!

கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாக்க 5 அற்புத வழிகள்.

கொரோனா உலக மக்களிடையே நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பயங்கர மாற்றத்தை கொடுத்துள்ளது. ஒரு சில நகரங்களில் ஒரு சில நாடுகளில் கொரோனாவை எதிர்த்துப் போராடி மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் நமக்கு கொடுக்க கூடிய ஒரே நம்பிக்கை. இந்த மாதிரியான கட்டத்தில் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். ஆகையால் கீழ்கண்ட 5 வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். அதாவது,

1 ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.

2.ஆல்கஹால் குடிப்பதை குறைக்க வேண்டும். ஏனென்றால் கொரோனா பாதிப்பு இருக்கும் நபர் ஆல்கஹாலை குடித்தால் அவருக்கு இது தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகையால் அதனை முற்றிலுமாக நிறுத்தி விடவேண்டும். 

 

3. மிக முக்கியமாக புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். புகைபழக்கம் இருந்தால் தயவுசெய்து இப்போதைக்கு நிறுத்தி வைக்கவேண்டும்.

4. நல்ல உடற் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு முதியவர்கள் அரை மணி நேரம், சிறியவர்கள் இளைஞர்கள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் உடற்பயிற்சி எடுத்துக்கொள்வது நல்லது.

5. மனசு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் பிடித்த புத்தகம், விளையாட்டுக்கள் மூலம் மன அமைதி கொள்ளுங்கள். 

இவை போக மிக முக்கியம் எவ்வளோ முடியுமோ அவ்வளவு சுத்தமாக கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அதேபோல் உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து இந்த வைரஸை கண்டிப்பாக எதிர்த்து வெற்றி காண்போம்.

Categories

Tech |