Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு பயந்து… வயலில் குடிசை போட்டு… குடும்பத்துடன் தஞ்சம் புகுந்த மக்கள்…!!

ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்த சிலர் கொரோனாவுக்கு பயந்துகொண்டு வயலில் குடிசை அமைத்து அங்கு குடியேறி உள்ளனர்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பலரும் அச்சத்தில் உள்ளன. மக்கள் பலரும் தங்களது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், சிவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிலர் தங்களது கிராமத்தில் இருந்து வெளியேறி சற்று தொலைவிலுள்ள அவரவர் வயல்களில் குடிசை போட்டு அங்கு வாழ்ந்து வருகின்றன.

கடந்த மூன்று வாரங்களாக விவசாயம் செய்து கொண்டும் தங்களது தேவையானவை பூர்த்தி செய்து கொண்டு அங்கு வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் தங்களிடம் இருப்பதாகவும், அதுமட்டுமில்லாமல் பசுக்கள் தங்களிடம் உள்ளதால் அவற்றில் பால் கரந்து அதை பயன்படுத்தி நாங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Categories

Tech |