தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாவோயிஸ்டுகளுக்கு கொரோனா தொற்றுக்கு பயந்து காவல்துறையினருடன் சரணடைந்துள்ளனர்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் கொரோனா தொற்றுக்கு பயந்து தெலுங்கானா மாநிலம் மானுகுருவில் வசித்து வந்த 3 மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 ஜெலட்டின் குச்சிகள், மூன்று டெட்டனேட்டர் டெண்டர்கள், நான்கு பேட்டரிகள், ஒரு கம்பி மூட்டை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.