Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – தந்திரகார சீனா….. மறைத்த சில உண்மைகள்..!!

கொரோனா வைரஸ் பற்றிய பல உண்மைகளை  சீனா மறைந்துள்ளது.

உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன பல விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் பல உண்மைகளை சொல்ல வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான கேள்விகளை நாம் பார்க்கலாம்.

கொரோனா உருவானது எப்போது.?

டிசம்பர் 31 WHO ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறாங்க. அதில் எங்களுடைய வுஹான் சிட்டியில் ஒரு மர்மமான வைரஸ் பரவி இருக்கிறது. இது மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸாக இருக்கிறது என சொல்கிறார்கள். டிசம்பர் 31 ஆனால் பல ஆய்வுகள் நவம்பர் மாதம் 17ம் தேதி இதே அறிகுறியுடன் பலபேர் இருந்திருக்கிறார்கள். அப்போ கொரோனா வைரஸ் பரவியது.  நவம்பர்-டிசம்பர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வைரஸ் பற்றிய தகவலை மறைக்க சீனா முயற்சியா.?

Whistle blower யார் இவர்கள்.? வெளி உலகத்திற்கு ஒரு விஷயத்தை வெளிப்படுத்த கூடியவர்கள், அதை பற்றி தெளிவுபடுத்த கூடியவர்கள். அப்பேற்பட்டவர்கள் இரண்டு மருத்துவர்கள் அவர்கள்தான் கொரோனா வைரஸ் வெளியுலகத்திற்கு முதலில் சொன்னார்கள். முதல் மருத்துவர் வுஹான் மருத்துவமனையில் இருக்கக்கூடிய கண் மருத்துவர். இவரிடம் வந்த ஒரு நோயாளிக்கு தான் வைரஸ் முதலில் இந்த அறிகுறி இருந்தது. அதன் மூலமாக ஒரு குறிப்பிடத்தக்க ஒரு மர்ம வைரஸ் கண்டுபிடிக்கிறார்.

 இதுபற்றி அவர் தகவல் கொடுக்கிறார். தன்னோடு பணியாற்றக்கூடிய சக மருத்துவர்களுக்கு இந்த மாதிரி ஒரு மர்மமான வைரஸ் இருக்கிறது. அதனால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அந்த நாட்டு சமூக வலைத்தளமான WECHAT ஒரு தகவலை பதிவிடுகிறார். அது எல்லா மருத்துவர்களுக்கும் போகிறது.

இந்த தகவல் தெரிந்ததும் சீன ஆபீஷியல், இவரை விசாரணைக்கு கூப்பிடுறாங்க. நீங்க வதந்தி பரப்பிரிங்க. வாங்கன்னு விசாரணைக்கு உட்படுத்தி இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது அவர் மீது வழக்குப் போடுகிறார்கள். இதனுடைய தாக்கம் வெளியுலகத்திற்கு தெரிய வந்ததும் நீங்க சொன்னது உண்மைதான் என்று விடுதலை பண்ணுறாங்க. ஏற்கனவே இந்த நோயாளிகளின் தொடர்பில் இருந்தவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு கொரோனோவால் அவரும் உயிர் இழக்கிறார்.

இரண்டாவது மருத்துவர் ஐவென்:

வுஹான் மருத்துவமனையின் எமர்ஜென்சி பிரிவின் இயக்குனராக இருந்த இவர். இந்த வைரஸ் பற்றி வெளி உலகுக்கு பேச ஆரம்பிக்கிறார். ஒரு சர்வதேசப் பத்திரிக்கை சார்பாக ஆய்வுக்கட்டுரையை இவரிடம் வாங்கினார்கள். அதில் தான் நிறைய விஷயங்கள் எழுதியிருந்தார். இது தெரிந்த சீன அரசு அவருடைய பேட்டியை சென்சார் பண்ணுறாங்க. அதோடு அந்த பேட்டி வெளியிடப்பட்ட அனைத்து வெப்சைட்டில், பேட்டிகள் உடனே உடனே அழிக்கப்படுகிறது.

அதோடு இந்த மாதிரி அளிக்கப்பட்ட ரகசியம் தெரிஞ்ச உடனே அங்கு இருக்கும் மக்களும், டாக்டர்களும் இந்த பேட்டியை வேறொரு வடிவத்தில்உருவாக்குறாங்க.  எமோஜி என்று சொல்லக்கூடிய அந்த சிம்பிள் இது ரெண்டையும் மிக்ஸ் பண்ணி சீன மொழியும் கலந்து அவருடைய கட்டுரையை மறுபிரசுரம் பண்ணி நிறைய பேருக்கு பரப்புறாங்க. அது தீயாக பரவ தொடங்கியது.

இறந்தவர்களுடைய எண்ணிக்கை:

 வைரஸின் பிறப்பிடமான சீனாவில் அவர்கள் சொல்லுவது தற்போது வரை 4 ஆயிரத்து 632 பேர் தான் இறந்திருக்கிறார்கள் என்று இதைக் கேட்ட பல உலக நாடுகள் இது உண்மையா இருக்குமா ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு பரவாது:

என முதல் மெசேஜை உலகநாடுகளுக்கு சொன்னது சீனா. அதுதான் இந்த வைரஸ் உடைய உக்கிரமான பரவலுக்கு காரணம் என்று உலக நாடுகள் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அடுத்ததாக இதனுடைய பரவல் தொடங்கிய பிறகு உலக நாடுகள் தங்களுடைய விமானங்களை நிறுத்தினார்கள். அதற்குள் இந்த வைரஸ் பல நாடுகளுக்கு போய்விட்டது. பிப்ரவரி இறுதி  மார்ச்சில் தான் பல உலக நாடுகள் விமானங்களை அனுப்புவதை நிறுத்தினார்கள்.

டிசம்பர் இறுதியில் இருந்து இது பற்றிய தகவல்கள் தெரிந்து இருந்தும் ஏன் சீனா விமானங்களை தடை செய்யவில்லை. அந்த கேள்விகளை உலக நாடுகள் கேட்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் 4 லட்சத்து 30 ஆயிரத்து சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார்கள். அதிலும் 40,000 பேர் இந்த குறிப்பிட்ட மாகாணத்திலிருந்து சென்றிருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

யார் முதல் நோயாளி:

இந்த முதல் நோயாளி இந்த நோய்க்கு முதலில் ஆட்பட்டார்கள் என்று பார்க்க வேண்டும். அதன் மூலமாகத்தான் இப்படி  இந்த நோய் பரவி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். அந்த அடிப்படையில் வுஹான் நகரில் இருக்ககூடிய மீன் சந்தையில் இருக்கக்கூடிய இறால் வியாபாரி அவருக்கு வயது 57, அவர் ஒரு பெண். wel gulxlan அந்த பெண் தான் முதல் நோயாளி என்று சொல்லப்படுகிறது .

இங்கு  ஏற்படக்கூடிய கேள்வி வொவ்வால் மூலமாக எரும்பு தின்னிகளுக்கு பரவி மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பிருக்கிறது என பெரும்பாலான ரிப்போர்ட்டில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். வவ்வால்களோடு, எறும்புத்தின்னிகளோடு தொடர்பு இருக்கக் கூடிய யாரோ ஒருவரது சந்தைக்கு வந்திருக்கக்கூடும் அவர் மூலமாக இந்த இறால் வியாபாரிக்கு தொற்று  ஏற்பட்டிருக்க முடியும். இதனால் இறால் வியாபாரி முதல் நோயாளியாக இருக்கமுடியாது.

சீனாவில் இருக்கக்கூடிய SOUTH CHINA MORNING POST பின்னோக்கி TRACK செய்ததில், நவம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை  வுஹான் நகரில் பல பகுதிகளில் இதே மாதிரியான அறிகுறிகளோடு பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் மொத்தம் எவ்வளவு பேர் 266 பேர் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள். அவரை கண்டுபிடித்து சீனா கூறினால்தான் இந்த மருத்துவ ரீதியான பல புதிர்களுக்கு விடை கிடைக்கும் என்று உலக நாடுகள் நினைக்கிறார்கள்.

Categories

Tech |