கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6257 ஆக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகின்ற நிலையில் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று ஒரேநாளில் 6,473 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,599 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 6,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,88,611 ஆக அதிகரித்து இருக்கிறது. மேலும் இன்று ஒரேநாளில் 86 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். இதனால் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,398 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது வரை 79,908 பேர் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.