இன்று தமிழக சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டது. அதில், இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,86,492 ஆக அதிகரித்துள்ளது. இன்று 4,910 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,31,583 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 58,475 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது.
அதேபோல இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 சேர்க்கப்பட்டுள்ளது.. இதனால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 51,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது மட்டுமில்லாமல் இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை – 1171
திருவள்ளூர் – 430
ராணிப்பேட்டை – 414
விருதுநகர் – 363
தூத்துக்குடி – 327
காஞ்சிபுரம் – 325
செங்கல்பட்டு – 223
திருச்சி – 213
தி.மலை – 210
மதுரை – 197
கோவை – 178
தேனி -165
குமரி – 152
வேலூர் – 137
நெல்லை-120
தஞ்சை-106
விழுப்புரம் -105
திண்டுக்கல்-99
சேலம்-99
ராமநாதபுரம்-88
க.குறிச்சி-86
தென்காசி-85
கடலூர்-78
சிவகங்கை-70
கிருஷ்ணகிரி-69
திருப்பத்தூர்-60
புதுக்கோட்டை-59
திருவாரூர்-45
நாமக்கல் -41
திருப்பூர்-29
அரியலூர்-26
பெரம்பலூர் – 15
நாகை-14
நீலகிரி -12
தர்மபுரி – 7
ஈரோடு -6
கரூர்-4