விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் நோயாளிகள் பாட்டு பாடி நாடகம் நடித்து தங்கள் பொழுதை போக்கி வருகின்றனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து மருத்துவமனையிலோ அல்லது தனிமைப்படுத்தும் முகாமிலோ தனியாக இருந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பலர் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் இவ்வாறு ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர நோயாளிகள் தங்களுக்குள்ளாகவே புதிய நட்பை உருவாக்கி அங்கு இருப்பவர்களுடன் தங்களது நேரத்தை போக்கி வருகின்றனர்.
அவ்வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனை மற்றும் 5 தனியார் கல்லூரிகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆமாத்தூரில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியுள்ள நோயாளிகள், பாட்டு பாடியும், நாடகம் நடித்தும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஆண்கள், பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் மனம் அழுத்தம் இல்லாமல், ஒன்று கூடி பொழுதை கழித்து வருகின்றனர்.