சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சிந்த மருத்துவ மையங்களில் இதுவரை 6 ஆயிரத்து 107 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில் இதுவரை 5101 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4723 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 36 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 24 மணி நேரத்தில் 41 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 36 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 296 ஆண்கள் 87 பெண்கள் உட்பட 378 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே போல் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை ஆயிரத்து 488 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு 1,384 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 58 ஆண்கள், 45 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட 104 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.