Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பால் பண்ணையையும் விட்டுவைக்காத கொரோனா… மாதவரம் ஆவினில் 8 பேருக்கு தொற்று உறுதி..!

சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆவின் பால் பண்ணை ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று இரவு முதல் ஆவின் பால் பண்ணை ஊழியர்கள் பணிக்கு வர அச்சம் தெரிவித்துள்ளனர்.

லாரிகளில் பால் பாக்கெட்டுகளை ஏற்றும் தொழிலாளர்கள் பலரும் இன்று பணிக்கு வராததால், 14 லாரிகளில் பால் பாக்கெட்டுகள் ஏற்பட்ட நிலையில், 20 லாரிகளில் லோடு ஏற்றப்படவில்லை. மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சுமார் 2.38 லட்சம் பால் பாக்கெட்டுகள் ஒவ்வொரு நாளும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் பால் பாக்கெட்டுகள் விநியோகிகப்பட்டு வருகிறது.

நேற்று இருவருக்கு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், மேலும் 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பால் விநியோகம் கேள்விக்குறியாக உள்ளது. அதேபோல, அங்கு வேலை செய்த ஊழியர்கள் அனைவரையும் பரிசோதனை செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |