கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல் இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான்.
இது குறித்து ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 77.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நிலவரம் குறித்து மாநிலங்களவையில் பேசிய அவர், கொரோனா இறப்பு விகிதமும் 1.67 சதவிகிதமாக குறைந்து வருகிறது என்றார். உலகிலேயே குறைந்த விகிதங்களில் ஒன்றாக, இந்தியாவில் 10 லட்சம் பேரில் 3,320 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்படுவதாகவும், 55 பேர் மட்டுமே உயிரிழப்பதாகவும் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.