Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவினாலும் அஞ்ச மாட்டோம்…. டெல்லி விவசாயிகளின் தொடர் போராட்டம்…?

 மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப  பெற வேண்டும் என்று டெல்லி விவசாயிகள் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது.

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று பஞ்சாப் மாநில விவசாயிகளின் போராட்டம் 143-வது நாளை எட்டியுள்ளது. இதனிடையே டெல்லியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறை பணியில் ஈடுபட்டு வருகின்றது.

டெல்லி போராட்டத்தில் புறநகர் பகுதிகளில் சாலையோரங்களில் குடில் போன்று அமைத்து தங்கியிருக்கும் வேளாண் விவசாயிகள் கொரோனா விழிப்புணர்வுடன் கவனமுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு வேளாண் விவசாயிகளுக்கு அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கும் எண்ணத்தில் இல்லை அதனால் இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை முற்றுகை போராட்டம் நீடிக்கும் என்று முக்கிய விவசாய அமைப்பான சம்யுக்தா கிஷான் மோட்ச அமைப்பின் தலைவர் தர்ஷன் பால் தெரியப்படுத்தியுள்ளார். விவசாயிகளின் மீது அக்கறை இருந்தால் கொரோனா தடுப்பு ஊசி போட்டு பாதுகாப்பு  முன்னுரிமை கொடுக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளை செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |