Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா தோன்றியது இந்த காலத்தில் தான்…. உண்மையை படம்பிடித்த செயற்கைகோள்….!!

கொரோனா தொற்று டிசம்பர் மாதத்திற்கு முன்பாகவே தோன்றிவிட்டது என செயற்கைக்கோள்களின் படங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது 

சீனாவில் தான் முதன்முதலில் கொரோனா தோன்றியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கும் சூழலில் எப்போது கொரோனா தொற்று உருவானது என்ற கேள்விக்கு இதுவரையிலும் சரியான பதில் கிடைக்காமல் உள்ளது. சீனா வெளியிட்ட அறிக்கையிலும் இது குறித்து சரியான தகவல்கள் இல்லை. டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொற்று பரவியது என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் இன்றளவும் அந்த அறிக்கையில் சந்தேகம் இருந்து வருகின்றது. அமெரிக்காவும் கொரோனா தொற்று விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாக குற்றம் சுமத்தி வருகின்றது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா தோன்றியது டிசம்பர் மாதத்தில் அல்ல. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே தோன்றியிருக்கும் என பிரபல ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி ஆய்வு மேற்கொண்டு உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. அதுவும் வாய் வார்த்தையாக இல்லாமல் செயற்கைக்கோள்களின் படங்களுடனும் இணையதள தேடலின் அடிப்படையிலும் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி நடத்திய ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் ஜான் ப்ரவுண்ஸ்ட்டின் கூறுகையில்,

செயற்கை கோள்களின் உதவியுடன் ஆராய்ந்த போது ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்திலேயே அந்நகரில் இருக்கும் ஐந்து முக்கிய மருத்துவமனைகளில் அதிகப்படியான கார்கள் நோயாளிகளுடன் வந்த வண்ணம் இருந்தது. அளவுக்கு அதிகமான கார்கள் மருத்துவமனையில் குவிவதன் காரணம் நிச்சயம் தோற்று நோய் பரவலாக தான் இருக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர். அதோடு கார்கள் மருத்துவமனையில் குவிந்த அதேசமயம் சீனாவின் தேடல் இணையதளமான இணையதளத்தில் மக்கள் அதிக அளவு தேடியது  இருமல் மற்றும் வயிற்றுப்போக்கு நோய் குறித்து. இவை கொரோனா தொற்றின் அறிகுறிகளாக கூறப்பட்டவையாகும்.

இணையதளத்தில் மக்கள் அதிக அளவில் தேடுவது அவர்கள் அந்த அறிகுறிகளால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துவதோடு, மருத்துவமனையில் குவிந்த கார்களின் எண்ணிக்கையும் தொற்று பரவலை உறுதிப்படுத்தியுள்ளது. 350 செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையிலும் மக்களின் இணையதள தேடலின் அடிப்படையிலும் கொரோனா தொற்று டிசம்பரில் தோன்றியதல்ல அதற்கு முன்பாக சீனாவில் தொடங்கிவிட்டது என ஹார்வார்ட் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |