தமிழகத்தில் 34 மாவட்டங்களை பாதித்துள்ள கொரோனாவால் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் இன்று மரணமடைந்துள்ள நிலையில் இன்று 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். 39,041 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
58,189 பேர் 28 நாள் தனிமை முடிந்தவர்களாக உள்ள நிலையில் 162 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகபட்சமாக திருப்பூரில் 35 பேருக்கும், கோவையில் 22 பேருக்கும், சென்னையில்18 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் 34 மாவட்டத்தை கொரோனா பாதித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு :
சென்னை – 199
கோவை – 119
ஈரோடு – 64
திருப்பூர் – 60
திண்டுக்கல் – 56
திருநெல்வேலி – 56
நாமக்கல் – 45
திருச்சி – 43
செங்கல்பட்டு – 43
தேனி – 41
ராணிப்பேட்டை – 39
திருவள்ளூர் – 29
கரூர் – 25
நாகப்பட்டினம் – 24
தூத்துக்குடி – 24
விழுப்புரம் – 23
கடலூர் – 19
சேலம் – 17
திருப்பத்தூர் – 16
கன்னியாகுமரி – 15
திருவாரூர் – 13
வேலூர் – 12
விருதுநகர் – 11
தஞ்சாவூர் – 11
திருவண்ணாமலை – 11
நீலகிரி – 9
காஞ்சிபுரம் – 8
சிவகங்கை –6
தென்காசி – 5
கள்ளக்குறிச்சி – 3
ராமநாதபுரம் – 2
பெரம்பலூர் – 1
அரியலூர் – 1