Categories
தேசிய செய்திகள்

8 நாளில் 1300 கி.மீ. சைக்கிள் பயணம்… தந்தையோடு வந்த 13 வயது சிறுமி …!!

காயமடைந்து தந்தையை ஹரியானாவில் இருந்து பீகார் வரை சைக்கிளில் அழைத்து வந்த 13 வயது சிறுமியின் செயல் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

கொரோனாதடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு திடீரென ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு, தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். ஒரு கட்டத்தில் அவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் நடைபயணமாகவும்,  சைக்கிளிலும் செல்லத் தொடங்கினர். இதேபோல தனது தந்தையை சைக்கிளில் வைத்துக் கொண்டு 13 வயது சிறுமி 1,300 கிலோமீட்டர் கடந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

பிகார் மாநிலத்தின் தர்பங்கா மாவட்டத்தில் இருக்கும் சிர்ஹூலி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பாஸ்வான். இவருக்கு 13 வயதான ஜோதி என்ற மகன் உள்ளார். பிழைப்புக்காக ஹரியானா மாநிலத்திற்குச் சென்று ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்த இவர் கடந்த ஜனவரி மாதம் விபத்து ஏற்பட்டதால் நடக்க முடியால், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் வறுமை சூழ்ந்து கொண்ட நிலையில் மத்திய அரசு முழு ஊரடங்கு பிறப்பித்தது.

இக்கட்டான சூழ்நிலையிலும் தவித்த மோகன் பாஸ்வான் வாடகை செலுத்தவில்லை என்ற காரணத்தினால் ஒரு வீட்டின் உரிமையாளர் ஈவுஇரக்கமின்றி வெளியே செல்லுமாறு கூறினார். கையில் செலவுக்கு இருந்த 500 ரூபாயை வைத்துக்கொண்டு ரேஷன் பொருட்கள் வாங்க ஜோதிடம் பாஸ்வான் கூறியுள்ளார். ஆனால் மகள் ஜோதியோ, அவரை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதன்படி, தான் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு மிதிவண்டி ஒன்றை வாங்கி, தந்தையை பின்னிருக்கையில் அமர்த்தி பீகாரை நோக்கி பயணத்தை தொடங்கினார்.

மே மாதம் ஒன்பதாம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய அவர்கள், பல்வேறு துயரங்களையும், கஷ்டங்களை கடந்து 1,300 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மே 17ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்தடைந்தார். சிறுமியின் இந்த செயலை கண்டு ஊர்மக்கள் நெகிழ்ந்து பாராட்டினர். இது குறித்து மோகன் பாஸ்வான் பேசுகையில், இவ்வளவு தூரம் நாம் செல்ல முடியாது என்று நான் கூறினேன். ஆனாலும் மன உறுதியோடு ஜோதி மேற்கொண்ட இந்த பயணத்தால் 8 நாட்களில் 1300 கிலோ மீட்டர் கடந்து வர முடிந்தது என்று தெரிவித்தார்.

இந்த பயணம் குறித்து சிறுமி ஜோதி கூறுகையில், எங்களிடம் இருந்த பணம் முழுவதுமாக காலி ஆகிவிட்டது.  வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு சொல்லிவிட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நிலையில் தான் வேறு வழி இல்லாமல் தான் ஊருக்கு வந்தோம். 1300 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியவில்லை என்றால் செத்து விடுவோம் என்று அப்பா கூறினார். இதனால்தான் நாங்கள் வந்து பயணம் செய்ய முடிந்தது. ஊர் திரும்பிய சிறுமியும்,அப்பாவும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Categories

Tech |