Categories
உலக செய்திகள்

அறிகுறி இல்லை….! ”சீனாவுக்கு புதிய தலைவலி” தலைதூக்கும் கொரோனா …!!

சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவது அந்நாட்டிற்கு புதிய  தலைவலியை ஏற்படுத்தியுள்ளது

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் இருக்கும் வூஹான் நகரில். பின்னர் தீவிர சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது அந்நாட்டிற்கு புதிதாய் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாமல் நோயாளிகள் இருப்பதனால் தொற்று மீண்டும் அதிக அளவில் பரவும் அபாயம் இருக்கிறது. இது தொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “சீனாவில் புதிதாக 27 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் asymptomatic  எனப்படும் அறிகுறிகள் தென்படாத தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது.

அதோடு சீனாவில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் 6 பேர் வெளிநாட்டில் இருந்து சீனாவுக்கு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சீனாவில் கொரோனா தொற்றினால் 82788 பேர் பாதிக்கப்பட்டு 4,632 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |