Categories
அரசியல்

சென்னையை தாண்டி…. பிற மாவட்டத்திலும் அதிகரிக்கும் பரவல்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. அதிலும் சென்னையில் நாளொன்றுக்கு 1000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் மட்டும் தான் பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேரும், விழுப்புரத்தில் 58 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும் ஒரே நாளில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் மதுரை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளிலும் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.

Categories

Tech |