Categories
சற்றுமுன் நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அடுத்த ரவுண்டை தொடங்கிய கொரோனா…! நீலகிரி கனவுக்கு முற்றுப்புள்ளி …!!

நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது.  இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது.

அனைத்து மாவட்டமும் பாதிப்பு:

மாவட்ட வாரியாக பார்த்தோமானால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடைசி வரை கொரோனா பாதிப்புமில்லாமல் இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட கொரோனா தொற்று பரவியது. இதனிடையே கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு, தூத்துக்குடி, கரூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது வரை கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது.

இரண்டாவது ரவுண்டு:

 

இந்நிலையில் தற்போது நீலகிரியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது. அங்கு ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை  பெற்று குணமடைந்து சென்ற நிலையில் தற்போது நீலகிரியில் கொரோனா மீண்டும் கணக்கை தொடங்கியுள்ளது. விரைவில் பச்சை மண்டலத்துக்கு நீலகிரி மாவட்டம் சென்று விடும் என்ற கனவில் இருந்தற்க்கு கொரோனா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Categories

Tech |