Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் …. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் ….!!!

நாகை மாவட்டம்  கூத்தூர்  ஊராட்சி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் .

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கூத்தூர் ஊராட்சி பகுதியில் கொரோனா  தடுப்பூசி முகம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி  முன்னிலை வகித்து உள்ளார்.

இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் தேரூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சந்திரமவுலி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் தியாகராஜன், மருத்துவக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 286 பேருக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இந்தத் தடுப்பூசி முகாமில்  வட்டார வளர்ச்சி அலுவலர்களான தியாகராஜன் ,ராஜகோபால் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |