கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த பயணிகளின் வருகைக்கு சுவிட்சர்லாந்தில் சில தளர்வுள் அறிவிக்கப்பட்டுள்ளது .
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் கொரோனா தடுப்பூசி முழு டோஸ் போட்டவர்கள் அல்லது பாதிப்பிலிருந்து குணமடைந்த நபர்களாக இருப்பவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வருவதற்கு அந்நாட்டு அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது .
அதன்படி அவர்கள் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழை உடன் கொண்டு வருவது கட்டாயம் இல்லை என்றும் அதேபோல் நாட்டிற்கு வந்தவுடன் தனிமை படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.