இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு வருகின்றனர் .
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தற்போது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி மற்றும் வீரர்களான ஷிகர் தவான், ரஹானே உமேஷ் யாதவ் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . இந்த நிலையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா ,அவரது மனைவியும் ,கூடைப்பந்து வீராங்கனையுமான பிரதிமா மற்றும் புஜாரா, அவரது மனைவி பூஜா ஆகியோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள், என்று விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா ஆகியோர் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டனர். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பும்ரா ,’ நான் தடுப்பூசி செலுத்திக்கொண்டேன், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
Vaccinated. Please stay safe everyone. pic.twitter.com/8ZrclDh2LI
— Jasprit Bumrah (@Jaspritbumrah93) May 11, 2021