கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரே வழி , தடுப்பூசி போட்டுக் கொள்வதுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது . வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை ,கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கர்நாடகம், பஞ்சாப் ,தமிழ்நாடு ஆகியமாநிலங்களில் கொரோனா தொற்றின் 2வது அலை காணப்படுவதாக மருத்துவர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை சுமார் 1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சுமார் 1 கோடியே 18 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து ,குணமடைந்து உள்ளதாகவும், 1.66 லட்சம் பேர் தொற்றிக்கு உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் 9 லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ,இதில் 8 ,944 பேரின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. உலக அளவில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ,தற்போது இந்தியா 3வது இடத்தை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை, கடந்த மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி செலுத்திக்கொண்ட பின் , 37 நாட்கள் கழித்து இன்று காலை ,டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2வது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் கொரோனா வைரஸிலிருந்து, நம்மை பாதுகாத்துக்கொள்ள ,தடுப்பூசி போடுவதைத் தவிர வேறு வழி இல்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலமாக, மட்டுமே கொரோனா வைரஸை எதிர்கொள்ள முடியும். எனவே தகுதி பெற்ற அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் செலுத்தி கொள்ளுமாறு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.