Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 303 பேருக்கு கொரோனா தொற்று…!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா வைரஸால் காஞ்சிபுரத்தில்  கிட்டத்தட்ட 3606 பேர்  பாதிக்கப்பட்டு இருந்தார்கள். தற்போது 303 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 3909 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் ஜூலை 26 வரை முழுக்க அமல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிள்ளையார் பாளையத்தில் 21 தெருக்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளதாகவும், காய்கறி, அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |