கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை அடைக்க உத்தரவிட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து டாஸ்மாக் கடை டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக் கவசம் சானிடைசர் உடனே வழங்க வேண்டும். அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள் , மாவட்ட மேலாளர்களுக்கும் மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.டாஸ்மார்க் கடைகளுடன் இணைந்த மதுக்கடை கூடங்களுக்கு சானிடைசர் வழங்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகள் , மதுக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.