வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என கொண்டாடப்படுகிறது. அங்கு நிலவி வரும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
அதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வெளி மாநிலங்களிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த பரிசோதனை வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதிக்கு அருகில் உள்ள சோதனைச்சாவடியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் 10-ற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சோதனையின் முடிவுகள் ஓரிரு நாட்களில் தெரிவிக்கப்படும் அதுவரை சுற்றுலா பயணிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு வட்டார மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.