கொரோனா வைரஸ் பரிசோதனையை இலவசமாக செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறிகள் தென்படுவதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ள கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை தனியார் பரிசோதனை மையங்களில் வசூலிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னும் நிறைய சோதனை மையங்களில் இது கூடுதலான விலையில் பரிசோதனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளும் இருக்கக் கூடிய நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதே போல ஒழுங்காக ஊரடங்கு உத்தரவுகள் கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்தையும் ஒரே மனுவாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கொரோனா பரிசோதனையை இலவசமாக மேற்கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி, தனியார் மருத்துவமனை எதுவாக இருந்தாலும் அதில் கொரோனா பரிசோதனை இலவசமாக மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது.