உலக அளவில் சீனா, அமெரிக்கா, ஜப்பான், ஹாங்காங், தென்கொரியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆன பிஎப் 7 ஒமைக்ரான் வைரஸ் தொற்று குறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கிடையில் இந்தியாவிலும் பிஎப் 7 வைரஸ் தொற்று ஆனது தற்போது கண்டறியப்பட்டுள்ளதால், சீனாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்ய மீண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதால் பாதிப்பு 49 ஆகவும் உயிரிழப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறது. அதன் பிறகு தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி 97 சதவீதம் பேருக்கும் இரண்டாம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சீனா மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.