அமெரிக்கா எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது.
நாடு முழுவதும் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க எல்லைகளில் சோதனைகளை வலுபடுத்த கனடா அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா-கனடா நுழைவு துறைமுகங்களில் பயணிகளுக்கு ஆன்சைட் ஸ்வாப் சோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கனடாவுக்குள் நுழைவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கோவிட்-19க்கு எதிர்மறையான சான்றிதழ்களை கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனையின்போது யாருக்காவது கோரோனோ இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள்.
அதன் பின் 10 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த விதிமுறைகளை மீறினால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் ஒரு கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அதற்கு தண்டனையாக 6 மாத சிறை அல்லது 750 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.