Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கும் டெஸ்ட் பண்ணியாச்சு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இப்பகுதியில் இதுவரை 884 பேர்கோரோனாவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அரசம்பாளையம் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் பணிபுரியும் 90 தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |