கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவோர் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. தொற்று இல்லை என்று உறுதியினால் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும் தமிழகம் முழுவதும் தற்போது சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்ததற்கு சென்னையில் இருந்து திரும்பும் நபர்களால் தான் என ஒரு குற்றச்சாட்டும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இதையடுத்து சென்னையில் பாதிப்புகளை கட்டுப்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துள்ளது. அதில், பரிசோதனை மேற்கொள்ளபவர்களும் முடிவு வெளியாகும் வரை சுயதனிமையில் ஈடுபட உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 1,992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 53,762ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,940 பேர் கொரோனோவால் பாதிகப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 82,275ஆக உயர்ந்த்துள்ளது.