நாட்டில் முதற்கட்டமாக 30 கோடி பேருக்கான கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு வழங்குவது என்பது குறித்த பட்டியலை தயார் செய்யும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளின் சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இன்னும் மூன்று மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முதல் கட்டமாக கொரோனா தடுப்பு ஊசி யார் யாருக்கு போடப்பட வேண்டும் என்பது குறித்து திட்டங்களை வகுக்கும் படி அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதன் காரணமாக தடுப்பூசி யார் யாருக்கு முதல் கட்டமாக போடப்பட வேண்டும் என்பது covid -19க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழு வரைந்த அமலாக்க திட்டத்தின் வரைவு மத்திய முகர்வர் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி முதல்கட்டமாக கொரோனா தடுப்பு ஊசிகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள் மற்றும் முதியோர் கர்ப்பிணிகள் என தடுப்பூசி போடவேண்டியவர்கள் குறித்த பட்டியல்களை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளனர்.