சந்தையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் சந்தை அமைந்துள்ளது. அந்த சந்தையில் தடுப்பூசி முகாம் ஒன்று நடத்தப்பட்டது.
அப்போது அங்குள்ள காய்கறி வியாபாரிகள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக முக கவசம் அணிந்த படி சென்றுள்ளனர். அதன்பின் முகாமில் தனிமனித இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டுள்ளனர்.