கொரோனா தடுப்பூசியை யார் கண்டுபிடித்தாலும்சரி அதனை உலக நாடுகளுக்கு தேவையான அளவு உற்பத்திச்செய்யும் திறன் இந்தியாவிற்கே உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் உண்மை நிலை என்ன இப்பொழுது பார்க்கலாம். உலகையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், இந்தியா மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனைகள் வெற்றி அடைந்துள்ள நிலையில், இதன் அடுத்தக்கட்ட சோதனையை நோக்கி உலக நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் யாருடைய தடுப்பூசியாக இருந்தாலும்சரி, அதனை உலக மக்கள் அனைவருக்கும் தேவைப்படும் அளவில் பலநூறு கோடி அளவிற்கு தயார் செய்யும் கட்டமைப்பு இந்தியாவில் மட்டுமே உள்ளது.
அதிலும் தடுப்பூசி தயாரிப்பில் உலகளவில் இந்தியா மூன்றாவது இடத்திலுள்ளது என்பதே உண்மை. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் அவசர அவசரமாக ஒப்பந்தம் மேற்கொண்டு தயாரிப்பு பணிகள் தொடங்கி உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜடாக்ஸ் 1, என்கோப்19 மற்றும் சாஸ்கோப்2 ஆகிய தடுப்பூசியை ஆண்டொன்றுக்கு 1,20,00,000 தடுப்பூசிகளை தயாரிக்க சீரகம் நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலகிலேயே சீரம் நிறுவனம்தான் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு திரனை கொண்டுள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறமிருக்க, ரஷ்யாவில் உருவாக்கப்பட்டு வரும் ஸ்பூட்னிக்V தடுப்பூசியை தயாரித்து, உலகம் முழுவதும் விநியோகம் செய்ய அந்நாட்டு அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளது.
அதுமட்டுமல்ல இந்தியாவிடம் மட்டுமே தங்கள் தடுப்பூசியை அதிகளவில் தயாரிக்கும் திறன் உள்ளதாக ரஷ்யா வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. அமெரிக்கா தயாரித்துள்ள ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசி விரைவில் 30,000 பேருக்கு கொடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட உள்ளது. இது வெற்றியடைந்தால் இந்த தடுப்பூசியை தயாரிக்கவும் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தின் போது மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் நல்ல பலன் அளிப்பதாக கூறப்பட்டது. அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்துகளை உடனடியாக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க கிட்டத்தட்ட மிரட்டும் தோழியில் கோரிக்கை விடுத்தது நினைவிருக்கலாம். ஆஸ்ட்ரா செனிகா தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்கவும் அமெரிக்கா இந்தியாவின் உதவியை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் குவாக்சின் தடுப்பூசியை விரைவில் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவரலாம் என்று தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சரி இந்தியாவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டாலும், அது ஏற்றுமதி செய்யப்படுமா அல்லது இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுமா என்ற பெரிய கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, அதே வேலையில் இந்தியர்கள் அனைவருக்கும் தேவைப்படும் அளவிற்கு இந்தியாவின் உற்பத்தித் திறன் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உலகின் எந்த மூலையில் வெற்றிகரமாக தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும், அது இந்தியாவில் உருவாக்கப்படும் வாய்ப்புகளே அதிகம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.