Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மொத்தம் 26, 590…. தீவிரமாக நடைபெறும் முகாம்…. கலெக்டரின் ஆய்வு….!!

பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக நடைபெறுவதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 293 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது முகாமில் பணியாற்றி கொண்டிருக்கும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி போடப் பட்டிருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார்.

அதன்பின் உடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்த பிறகே தடுப்பூசி செலுத்தப்படுகின்றதா என்பதை உறுதி செய்துள்ளார். இதனையடுத்து தடுப்பூசி செலுத்துபவர்களை 30 நிமிடம் கண்காணித்த பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறதா மற்றும் தடுப்பூசி கையிருப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை அவர்களிடம் கேட்டு அறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் தகவல் பதிவேடுகளை முறையாக பதிவு செய்யப்படுகிறதா என அவர்களிடம் கேட்டுள்ளார். மேலும் இந்த முகாம்களில் 20 ஆயிரத்து 590 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |