கொரனோ தடுப்பூசி முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள சத்தியவாணிமுத்து பகுதியில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அதன்பின் திட கழிவு மேலாண்மை கிடங்கு மற்றும் அங்கன்வாடி மையத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
இதனை அடுத்து சத்தியவாணிமுத்து பகுதியில் 3-வது தெருவில் பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்கு குவிந்து கிடக்கின்றன குப்பைகளை அகற்றி கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மற்றும் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சத்தியவாணிமுத்து பகுதியை ஒட்டி இருக்கும் ரயில்வே பகுதியில் வசித்து வருகின்ற 120 குடும்பத்தினர் அங்கு வந்து தாங்கள் நிரந்தரமாக வசிக்க இருப்பிடம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரக்கோணம் உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோரை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.