Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“மிகப்பெரிய ஆயுதம்” கட்டாயம் போட வேண்டும்…. ஆட்சியரின் ஆய்வு….!!

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் தற்போது நடைபெற்றுள்ளது. இதில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. இதை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது, தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் காலக்கெடு முடிந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும், ஒமைக்ரான் தொற்று பரவி வருவதால் ஒவ்வொரு நபரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதமாக இருக்கிறது. ஆதலால் இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |