கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்து கொள்வதற்காக அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது அவசியம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு கடந்த வருடம் பரவ ஆரம்பித்து தற்போது வரை நீடித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி 16 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் இந்த தடுப்பூசி முதலில் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது .அதன் பின்பு மார்ச் 1ஆம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து விருப்பம் உள்ளவர்களும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. தற்போது சூழ்நிலையின் படி கொரோன வைரஸ் மீண்டும் அதிகரித்து கொண்டு வருவதால் வயது வந்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவருமான தற்போதைய மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தேவைகள் விருப்பங்கள் இவை அனைத்தையும் தாண்டி மக்களின் பாதுகாப்பை மனதில் கருதி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்திக்கு பதிலளிக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் “நாம் ஏன் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்துகிறோம் என்றால் இந்த கட்ட தடுப்பூசிகள் வருகிற ஜூலை வரைக்கு மட்டுமே தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக’’ கூறியுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மற்றும் டெல்லி முதல்வர்கள் நாடு தழுவிய அளவில் வயது வந்தோருக்கு தடுப்பூசிகள் உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.