Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மக்கள் ஆர்வமா இருக்காங்க… தீவிரமாக நடைபெறும் பணி… கட்டுப்பாடு நடவடிக்கைகள்…!!

 18 வயது முதல் 44 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது  நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி மருத்துகளை மக்கள்  சிறப்பு மருத்துவ முகாம்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையகளில் சென்று போட்டுக் கொள்ளலாம். இதனை அடுத்து முன்கள பணியாளர்களுக்கும், 45 வயதை தாண்டியவர்களுக்கும் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் 18 வயது முதல் 44 வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து கரூர் அரசு பழைய மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் போட்டுக் கொள்கின்றனர்.

Categories

Tech |