கொரோனா தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 2 வது டோஸ் செலுத்துவதற்கு முடிவுசெய்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த வருடம் பரவ பரவ ஆரம்பித்த கொரோனா வைரசால் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது அதனை கட்டுப்படுத்துவதற்காக பல மருத்துவர்களின் முயற்சிக்குப் பிறகு அஸ்டராஜெனெகா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அஸ்டராஜெனெகா தடுப்பூசியை இந்தியா சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. கடந்த ஜனவரி 16ம் தேதியிலிருந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
அதன்படி ஐரோப்பாவில் பலருக்கு அஸ்டராஜெனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக கூறியுள்ளது. மேலும் இதனை ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியன் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு 14 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்ட இந்த கொரோனா தடுப்பூசியில் 169 பேருக்கு மட்டுமே இரத்தம் உறைதல் ஏற்பட்டதாகவும் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் பல நாடுகளாக தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்த இருப்பதாகவும் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலின் தரியா ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு தற்போது இரண்டாவது டோஸ் செலுத்துவது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.