Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசியால் ரத்த உறைவு…. இலங்கையில் உயிரிழந்த 3பேர்…. மேலும் 3 லட்ச தடுப்பூசிகள் இறக்குமதி….!!!

இலங்கையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா  தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக உலக நாடுகள் அனைத்திலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதியிலிருந்து மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை 902500 பேருக்கு இந்தியாவிடமிருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அதில் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாகவும் அதில் 3 பேர் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரத்த உறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். இதனிடையில் சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டிருந்த 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |