கொரோனா வைரஸ் காரணமாக நேற்று ஒரே நாள் உயிரிழப்பில் அமெரிக்காவை இந்தியா பின்னுக்கு தள்ளியது.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த ஏழு மாதமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 215-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி தற்போது மீண்டு வரும் நிலையில் இருக்கின்றன. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவால் செய்வதறியாத துயரில் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 90 லட்சத்து 51 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதில் அமெரிக்காவில் மட்டும் 23 லட்சம் பேர் அடங்குவர்.
ஏறக்குறைய ஒரு லட்சத்து 22 ஆயிரம் உயிரிழப்புகளை அமெரிக்கா இழந்து வேதனையில் தவித்து வரும் அமெரிக்கா 9 லட்சத்து 80 ஆயிரம் பேரை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளது மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது. இந்த நிலையில் கடந்த 89 நாட்களுக்கு பிறகு அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 300கும் கீழ் வந்துள்ளது மக்களை நிம்மதியடைய வைத்துள்ளது.
நேற்று மட்டும் 26,079 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 23,56,657 பேராக உயர்ந்துள்ளது. இதுவரை 1,22,247 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 9,80,367ஆக உயர்ந்துள்ளது. இதனால் 12,54,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 16,477 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 267 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி 268 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 89 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு குறைந்துள்ளது. நேற்று பிரேசில் 601, இந்தியா 426, மெக்ஸிகோ 387, அமெரிக்கா 267, பேரு 184, சிலி 184 உயிர்களை நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு பலி கொடுத்தன.