அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கொடிய வைரஸயை அழிப்பதற்கு தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லாத நிலையில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் தடுப்பூசி தயார் ஆனால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை உலகின் பல பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருவது போல் தடுப்பு ஊசியையும் அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பயன்படுத்துவதை ட்ரம்ப் மீண்டும் ஆதரித்துள்ளார். இந்த மருந்து கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை அளிப்பதில் பயனற்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் ட்ரம்ப் அந்த மருந்து மீது தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.