Categories
தேசிய செய்திகள்

கொரோனா சிகிச்சையளிக்கும் முன்களப்பணியாளர்களுக்கு உரிய வசதிகளை செய்ய வேண்டும்…!!

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் என முன் களப்பணியாளர்களுக்கு உரிய ஊதியம் மற்றும் வசதிகள் செய்து தர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஆருஷி ஜெயின் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களின் ஊதியம் பிடித்தம் விவகாரத்தை உயர்நீதிமன்றங்கள் கண்காணிக்க முடியாத என்ற கேள்வியை எழுப்பினர். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மருத்துவர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவேண்டும் என தெரிவித்து, மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது என வாதிட்டார்.

மேலும், மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். ஊதியம் வழங்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதுதவிர பாதுகாப்பு கவசங்கள் மருத்துவஊழியர்களுக்கு மட்டுமே போதுமானது, ஆய்வக ஊழியர்களுக்கு தேவையில்லை;

ஏனெனில் அவர்கள் கொரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இல்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட நீதிபதிகள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவர்களை தேவையான இடங்களில் தங்கவைத்து உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனக் ஆணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |