Categories
தேசிய செய்திகள்

“கொரோனா” அவங்க இங்க வர முடியாது….. நாம அங்க போக முடியாது….. போக்குவரத்து முற்றிலும் துண்டிப்பு….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக-கர்நாடக எல்லை போக்குவரத்தை இருமாநில அரசுகளும் முற்றிலுமாக துண்டித்துள்ளன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ  வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனுடைய தாக்கம் வெளிநாடுகளிலிருந்து அல்லது வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளால் தான் அதிகம் பரவுகிறது என்பதை உணர்ந்த அரசு.

மாநில எல்லைகளுக்குள் பல கட்டுப்பாடுகளை விதித்து போக்குவரத்தை தொடர்ச்சியாக துண்டித்து வருகிறது  அதன்படி நேற்றைய தினம் தமிழக அரசு கர்நாடகா செல்லும் அரசு பேருந்துகளை இயக்க தடை விதித்தது. இந்நிலையில் கர்நாடக அரசு இன்று அவர்களது சார்பில் தமிழகத்திற்கு சென்று வந்த பேருந்துகளை தடை விதித்துள்ளது. இதனால் தமிழக – கர்நாடக எல்லைகளுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |