Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. அமல்படுத்தப்படும் பொது முடக்கம்…. ஆஸ்திரியா பிரதமர் அறிவிப்பு….!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரியாவிலும் கொரோனா தொற்று பரவலானது அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நான்கு அலைகளால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது 5வது அலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களுக்காக சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் நோய் தொற்று அபாயம்  இருக்கும் பகுதிகளில் மக்கள் வெளியே வருவதற்கு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகின்ற திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று ஆஸ்திரியா பிரதமரான அலெக்சாண்டர் ஷாலன்பெர்க் அறிவித்துள்ளார். இந்த பொது முடக்கமானது பத்து நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |