கர்நாடக மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டப்படும் கரகா திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரின் மிக முதன்மையான தேசியத் திருவிழா என்பது, சித்திரா பௌர்ணமி நாளில் நடக்கும் திரௌபதி அம்மன் கரகத் திருவிழா ஆகும். இதனைக் கொண்டாடுவதும் திகளர்கள்தான். பெங்களூரு தர்மராயா சுவாமி ஆலயம் எனப்படும் ‘திரௌபதி ஆலயத்தில்’ சித்திரை மாதத்தில் பதினோரு நாட்கள் கரகா திருவிழா நடக்கும்.
அதில் முக்கிய நாளான பெரிய கரகம் (Pete Karaga) எனும் கரக ஊர்வலம் சித்திரா பௌர்ணமி அன்று நடக்கிறது. அதனைக் காண லட்சக் கணக்கான மக்கள் திரளுகிறார்கள். ஆண்டில் ஒருமுறை உங்கள் முன் தோன்றுவேன்’ என திரௌபதி வன்னியர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப, திரௌபதி அம்மன் கரகத்தில் எழுந்தருளுகிறார் என்பது இதன் ஐதீகம் ஆகும்.
திருவிழாவில் 4-5 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி:
இந்த நிலையில், பெங்களூரில் கரகா திருவிழா கொண்டாட்டம் குறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். நகரின் ஸ்ரீ தர்மாராயண சுவாமி கோவிலில் திருவிழா கொண்டாட்டத்தின் போது 4-5 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். கொண்டாட்டங்கள் இன்று மாலை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.
திருவிழாவுக்கு தடை:
அதேசமயம், பெங்களூர் கரகா சக்தித்யோத்சவாவைக் கொண்டாடுவது தடைசெய்யப்பட்டுள்ளது பெங்களூரு டி.சி.பி சென்ட்ரல் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. பொது கொண்டாட்டம், ஊர்வலம் மற்றும் வேறு எந்த பொது நிகழ்ச்சியும் செய்யக்கூடாது எனவும் பெங்களூரு குடிமக்கள் உத்தரவுகளைப் பின்பற்றி வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, எந்தவொரு மத நடவடிக்கைகளுக்கும் ஒன்றுகூட வேண்டாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கரகா திருவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய தர்மராய சுவாமி கோயில் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு கரகா திருவிழா கொண்டாடப்படாது என தர்மராய கோயில் ட்ரஸ்ட் நேற்று அறிவித்துள்ளது.