சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் இதுவரை 1.85 லட்சம் பேர் வெளியூர்களுக்கு சென்றுள்ளனர். நேற்று இயக்கப்பட்ட 2,400 பேருந்துகளில் 1.85 பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கோயம்பேட்டில் இருந்து கூடுதலாக அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து சென்று கொண்டிருக்கின்றனர். நேற்று பிற்பகல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தகவல் வெளியான சில மணி நேரங்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து விட்டனர்.
நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் கூட்ட நெரிசலாக இருந்துது. போதுமான பேருந்துகள் இல்லாததால் மக்கள் பேருந்தின் மேற்கூரைகளில் கூட பயணித்ததை காண முடிந்தது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் சொந்த ஊருக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.